சுருட்டபள்ளி வால்கேஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜை
ADDED :710 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள நாகலாபுரம் மண்டலம் சுருட்டபள்ளி கிராமத்தில் வீற்றிருக்கும் மரகதாம்பிகை சமேத வால்கேஸ்வர சுவாமிக்கு அன்னாபிஷேக பூஜை வெகுச் சிறப்பாக நடைபெற்றது. கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மகா ஆரத்தியை அடுத்து பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.