முன்னுதித்த நங்கை அம்மனுக்கு துப்பாக்கியுடன் போலீஸ் வரவேற்பு
ADDED :711 days ago
சுசீந்திரம்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு திரும்பிய சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோவில் அ ணுகுசாலையில் நேற்று சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. கேரள போலீசார் வாத்திய இசை யுடன் துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு மரியாதை செய்தனர். மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பிரபாஜிராம கிருஷ்ணன், விழா குழுத் தலைவர் வீரபத்திரன் தலைமையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த அம்மன், சுசீந்திரம் கோவிலை வந்தடைந்தது. வழிநெடுக அம்மனுக்கு திருக்கண் சார்த்து வழிபாடு நடந்தது.