சந்தனக்காப்பு, வெள்ளி அங்கியில் அருள்பாலித்த பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி
ADDED :737 days ago
திருப்புத்தூர்; குரு தலமாக பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் முன்புள்ள ஆலமரத்தின் அடியில் கார்த்திகைப் பெண்கள் 6 பேரும் சிலை வடிவில் அருள்கிறார்கள். இவர்களுக்கு கிழக்கு நோக்கி அமர்ந்து, அஷ்டமாசித்திகளை சிவபெருமான் போதித்ததாக சொல்கிறது கோயில் ஸ்தல வரலாறு. இந்தக் கோயிலில் பிரதான தெய்வமாக வீற்றிருப்பவர் தட்சிணாமூர்த்தி. இவரை வழிபட்டால் குருவின் அருள் எளிதில் கிட்டும். இக்கோயிலில் இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் சந்தனக்காப்பு, வெள்ளி அங்கியில் தட்சிணாமூர்த்தி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.