உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் பங்காரு அடிகளாருக்கு பக்தர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

பங்காரு அடிகளாரின் 16ம் நாள் நினைவு தினத்தையொட்டி இன்று ராமேஸ்வரத்தில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் சீதா தீர்த்தத்தில் இருந்து மவுன ஊர்வலம் சென்றனர். அவர்கள் திட்டகுடி, கோயில் நான்கு ரதவீதி வழியாக அக்னி தீர்த்த கடற்கரை வந்தனர். பின் பங்காரு அடிகளார் திருஉருவ படத்திற்கு மகா திபாராதனை செய்து வழிபட்டனர். இதில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், சமூக ஆர்வலர் தில்லைபாக்கியம், ஹிந்து முன்னணி ராமமூர்த்தி, ஹிந்து மக்கள் கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பிரபாகரன், பா.ஜ., நகர் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமு, காங்., நகர் தலைவர் ராஜுவ்காந்தி, யாத்திரை பணியாளர் சங்க நிர்வாகி வெள்ளைச்சாமி மற்றும் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர். அதன் பின் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் மலரஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !