வடமதுரையில் துர்க்கையம்மனுக்கு ராகு கால பூஜை
ADDED :738 days ago
வடமதுரை: வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் துர்க்கையம்மனுக்கு ராகு கால பூஜை நடந்தது. பால், இளநீர், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட ஏழு வகை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன் நடத்தி வைத்தார். விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.