அவன்டிபோரா கோயில் (அழிந்தது)
ADDED :4749 days ago
அவன்டிபுராவிலே அவன்டிவர்மன் இரண்டு பெரிய கோயில் அமைத்தார். வன்டிஸ்வாமின் என்ற கோயில் விஷ்ணுவிற்காகவும் மற்றொன்று அவன்டிஸ்வரா என்ற கோயில் சிவனுக்காகவும் அமைத்தார். முன்னோர்கள் தங்கள் அரசர் உரிமை பெறுவதற்கு முன்னதாகவே இக்கோயிலை கட்டி உள்ளனர். இறுதியில் ஆட்சித்தலைமை அடைந்தனர். ராஜா அவருடைய இறப்பு வரையில் வைஷ்ணவர் என்பதையே நினைவூட்டும் வகையில் தன் குழந்தை பிராயம் முதல் விஷ்ணுவின் பக்தனாகவே இருந்தார். அவருடைய மந்திரி சுறா சிவன் பக்தனாக இருந்ததால், அவர் மற்றொரு கோயிலை சிவனுக்காக எழுப்பினார். அவன்டிஸ்வாமின் மற்றும் அவன்டிஸ்வரா கோயில்கள் ஜெலும் நதியின் இடது கரையில் அமைந்துள்ளது. இவை தென் ஸ்ரீநகரின் தேசியநெடுஞ்சாலையிலிருந்து 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.