காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசி சிறப்பு பூஜை
ADDED :733 days ago
காரமடை : காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை மாவட்டத்தில், வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஐய்பசி மாத சுக்லபக்ஷ ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.