உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் பாலாலய பூஜை

அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் பாலாலய பூஜை

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் திருப்பணிக்கான பாலாலய பூஜை நடந்தது. அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் திருப்பணிக்காக இந்து சமய அறநிலைத்துறை நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து கோவில் வளாகத்தில் பாலாலய திருப்பணி துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. முன்னதாக நேற்று மாலை முதல் கால பூர்வாங்க பூஜை துவக்கி கலசங்கள், பரிவார, ராஜ கோபுரம், மூலவர் விமான கலாகர்ஷனம் செய்து அக்னி காரியம் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசகம், பஞ்சான பூஜை, மூல மந்திரம், மாலா மந்திரம், மகா மந்திரம், ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், பூஜைகள் தீபாராதனை நடந்து திருப்பணி துவங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளர் பாலமுருகன், செயல் அலுவலர் சூரியநாராயணன், எழுத்தர் நிரேஷ்குமார், தொழிலதிபர் முரளி, மோகனகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் அன்பு, கவுன்சிலர் குமார் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !