உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடிகள்; அதிநவீன இயந்திரத்தால் சேதமடைந்த சிற்பங்கள்

அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரத்தில் செடிகள்; அதிநவீன இயந்திரத்தால் சேதமடைந்த சிற்பங்கள்

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கோபுரத்தில் சுத்தம் செய்யும் போது சிற்பங்களுக்கு இடையே வளர்ந்துள்ள செடிகள் அகற்ற படாமல் உள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை மஹா தீப திருவிழாவை முன்னிட்டு, கோவிலிலுள்ள, 9 கோபுரங்களில், 4 கோபுரங்கள் துாய்மைபடுத்தும் பணி நடக்கிறது. இதற்காக, 162 அடி உயரம் வரை தண்ணீர் பீய்ச்சி அடிக்கக்கூடிய, சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்ட தீயணைப்புத்துறை வாகனம் கொண்டு, மேற்கு கோபுரம் துாய்மை படுத்தும் பணி நேற்று துவங்கியது. அதிநவீன இயந்திரம் கொண்டு தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்த போது பழமையான  கோவில் சிற்பங்கள் சேதமடைந்தது. மேலும், சிற்பங்களுக்கு இடையே வளர்ந்துள்ள செடிகள் அகற்ற படாமல் உள்ளது. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !