குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
ADDED :705 days ago
அன்னூர்: குமரன் குன்று கோவிலில், இன்று கந்த சஷ்டி சூரசம்ஹார விழா துவங்கியது.
குமரன் குன்று கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 62ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா இன்று துவங்கியது. இன்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வருகிற 17ம் தேதி வரை, தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு வழிபாடு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. வரும் 18ம் தேதி காலை 9:30 மணிக்கு, நாம ஜெபம், கலச பூஜை, அபிஷேக ஆராதனை நடக்கிறது. மாலை 3:30 மணிக்கு கிரிவலம் வருதலும், சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு முழுவதும் குமரன் குன்று குழுவின் பஜனை நடக்கிறது. வரும் 19ம் தேதி காலை 9:00 மணிக்கு தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.