/
கோயில்கள் செய்திகள் / போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
ADDED :701 days ago
போடி; போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஹரிஷ் குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அலங்காரத்தில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். விழாவினையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் தரிசனம் பெற்றனர். பக்தர்களுக்கு சஷ்டி விரத ரக்க்ஷா பந்தனம் கட்டப்பட்டது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடக்கிறது.