கோவை பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1061 days ago
கோவை; ராம் நகர் பட்டேல் ரோடு, பாலதண்டபாணி, மகா கணபதி, துர்கை அம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத பாலதண்டாயுதபாணி சுவாமி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கந்த சஷ்டி இரண்டாம் நாளில் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.