உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு; விண்ணை பிளந்த சரணகோஷம்.. 41 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு; விண்ணை பிளந்த சரணகோஷம்.. 41 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை; சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. பக்தர்களின் சரணகோஷம் விண்ணை பிளந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக இன்று நடை திறக்கப்பட்டது. கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நாளை முதல் நாள்தோறும் அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். 41 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறும். டிசம்பர் 30ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது. பக்தர்களுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !