சகல செல்வமும் கிடைக்க ஓம் சரவணபவ சொல்லுங்க..!
ADDED :690 days ago
சூரபத்மனை சம்ஹாரம் செய்ய வந்த முருகப்பெருமான் திருச்செந்துாரில் சுப்பிரமணியராக நான்கு கைகளுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் தாமரை மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருக்கிறார். பிரதான உற்ஸவர் சண்முகர் தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். மூலவருக்குரிய பூஜை, மரியாதைகள் இவருக்கும் உண்டு. இவரை வணங்கினால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.
முருகப்பெருமானின் நாமங்களில் ஓம் சரவணபவ என்னும் மந்திரத்தை தினமும் சொன்னால் சகல செல்வமும் உண்டாகும்.
ச - செல்வம்
ர - கல்வி
வ - முக்தி
ண - பகை வெல்லல்
ப - கால ஜெயம் (எமபயம் தீரும்)
வ - ஆரோக்கியம்
சரவணபவ என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்று பொருள்.