கூடல் சுந்தரவேலவர் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தர வேலவர் கோயிலில் 26 வது ஆண்டு கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆறாம் நாளான இன்று காலையில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து காமாட்சியம்மன் கோயில் தெரு, மெயின்பஜார், நடுத்தெரு வழியாக ஊர்வலம் சென்று கோயிலை அடைந்தனர். சுந்தரவேலருக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மகளிர் குழுவினரின் தெய்வீக கூட்டு வழிபாடு பிரார்த்தனை நடந்தது. துர்க்கை அம்மனுக்கு சக்தி அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலையில் சக்திவேல் வாங்குதல் நிகழ்ச்சியும் சூரசம்காரம் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். நாளை (நவ.19) சுந்தரவேலருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் மயில்வாகனத்தில் சுவாமி எழுந்தருளுதல், ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. திருக்கல்யாண நிகழ்ச்சியை நெல்லை உமையொருபாக ஆதினம் உமா மகேஸ்வர சிவாச்சாரியார், ஸ்தல அர்ச்சகர் சந்திரசேகரன் நடத்துகின்றனர்.