உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்கக்காப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர் அருள் பாலிப்பு

தங்கக்காப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியர் அருள் பாலிப்பு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழாவில் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் தங்கக்காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

திருக்கோவிலூர் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் கடந்த 13ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. விழாவின் நிறைவு நாளான இன்று காலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்கக்காப்பு அலங்காரம், சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !