அருணாசலேஸ்வரர் கோயிலில் 1008 சங்க அபிஷேகம்; தங்க பூத வாகனத்தில் சுவாமி உலா
ADDED :958 days ago
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் மூன்றாம் நாள் காலை உற்சவத்தில், தங்க பூத வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோவில் மூலவர் சன்னதி முன் 1008 சங்க அபிஷேக சிறப்பு யாக பூஜை நடந்தது. மூன்றாம் பிறகாரத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.