உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலர்களின் நடுவே மலையப்ப சுவாமி; 8 டன் மலர்களால் திருப்பதியில் புஷ்ப யாகம்

மலர்களின் நடுவே மலையப்ப சுவாமி; 8 டன் மலர்களால் திருப்பதியில் புஷ்ப யாகம்

திருப்பதி; திருமலை திருப்பதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத  மலையப்ப சுவாமிக்கு 8 டன் மலர்களால் புஷ்பயாக மகோத்ஸவம் நடைபெற்றது.

கார்த்திகை மாத ஷ்ரவண நட்சத்திரத்தை முன்னிட்டு திருமலை ஸ்ரீவாரி கோயிலில் புஷ்பயாக மஹோத்ஸவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 17 வகையான நறுமண மலர்களாலும், 6 வகையான இலைகளாலும், ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பசுவாமிக்கு மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. வண்ண மலர்கள் மற்றும் இலைகளுக்கு நடுவே சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஸ்ரீவாரி கோவிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள கல்யாணமண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஸ்ரீ மலையப்பசுவாமிக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை புஷ்பயாக மஹோத்ஸவம் நடந்தது. புஷ்ப யாகத்திற்காக மொத்தம் 8 டன் மலர்களை நன்கொடையாளர்கள் வழங்கினர். தமிழகத்தில் இருந்து 4 டன், கர்நாடகாவில் இருந்து 2 டன், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து 2 டன் பூக்கள் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது குறிபிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !