உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
ADDED :1010 days ago
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் , கார்த்திகை முதல் சோமவார 108 சங்காபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 9.30 மணிக்கு விநாயகர் பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை, ஹோமம், காலை 10.30 மணிக்கு அபிஷேக பூஜைகள், காலை 11.00 மணிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஓம் வடிவில் சங்குகள் வைக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.