உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீபத் திரு விழா: நான்காம் நாளில் நாக வாகனத்தில் அண்ணாமலையார் உலா

திருவண்ணாமலை தீபத் திரு விழா: நான்காம் நாளில் நாக வாகனத்தில் அண்ணாமலையார் உலா

திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் தங்க நாக வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதி உலா வந்து  பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்கிளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் 4ம் நாளான இன்று காலை உற்சவத்தில், தங்க நாக வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி,  மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !