தஞ்சை பெரிய கோவிலில் சோமவார1008 சங்காபிஷேகம்: ஏராளமானோர் தரிசனம்
ADDED :709 days ago
தஞ்சாவூர், கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது.
கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் சோமவாரமான இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில், பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல, வரும் 27ம் தேதி இரண்டாவது, டிசம்பர் 4ம் தேதி மூன்றாவது, டிசம்பர் 11ம் தேதி நான்காவது சோமவாரம் நடைபெறுகிறது.