உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விராலிமலை முருகன் மலைக்கோவில் பாதையில் சிலைகள் உடைப்பு

விராலிமலை முருகன் மலைக்கோவில் பாதையில் சிலைகள் உடைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோவில் செல்வதற்கு, படிகளும், யானை அடி பாதையும், வாகனங்களில் செல்ல தார் சாலையும் உள்ளன. தார் சாலை ஓரங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட பல சுவாமி சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த சிலைகளை, மர்ம நபர்கள் உடைத்து உள்ளனர். எனவே, சிலைகளை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மலைப்பாதையில், கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !