கொடையில் ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்தநாள் வைபவம்
ADDED :684 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள சாய் ஸ்ருதியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 98 ஆவது பிறந்தநாள் வைபவம் நடந்தது. விழாவில் சாய் ஸ்வரஞ்சலி, நாராயண சேவை எனும் அன்னதானம், வஸ்திரதானம் மற்றும் சிறப்பு ரத்த தான முகாம் நடந்தது. மகா மங்கள ஆரத்தி, சாய் சுருதி பிரபஞ்சாலி பகவானின் ஊஞ்சல் உற்சவம் ஆகிய நடந்தன. விழாவில் டி.வி.எஸ்., தலைவர் மல்லிகா சீனிவாசன், மாநில துணைத்தலைவர் விஜய்கிருஷ்ணா உட்பட சத்திய சாய் சேவா நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். இதில் ஏராளமானோர் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று வஸ்திரதானம், மற்றும் அன்னதானம் பெற்று சென்றனர்.