/
கோயில்கள் செய்திகள் / எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்! அரோகரா கோஷத்துடன் வலம் வந்த அண்ணாமலையார் தேர்; பக்தர்கள் பரவசம்
எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்! அரோகரா கோஷத்துடன் வலம் வந்த அண்ணாமலையார் தேர்; பக்தர்கள் பரவசம்
ADDED :684 days ago
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப ஏழாம் நாள் உற்சவத்தில், உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அண்ணாமலைக்கு அரோகரா என கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர். முன்னதாக காலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி பஞ்சரத தேரோட்டம் துவங்கியது. முதலில் விநாயகர் தேரை மாட வீதிகளில் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து செல்கின்றனர்; தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத முருகன் தேரோட்டம் நடைபெற்றது. மாலையில் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருள அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிப்பட்டனர். விழாவில் பக்தர்கள் குழந்தையுடன் கரும்புத் தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.