/
கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் நல்லபடியாக முடிந்த தேரோட்டம்; பிரம்மாவுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை
திருவண்ணாமலையில் நல்லபடியாக முடிந்த தேரோட்டம்; பிரம்மாவுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை
ADDED :686 days ago
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழாவில் தேரோட்டம் நல்லபடியாக முடிந்ததை யொட்டி, உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் பெரிய தேர் முன் நின்று பிரம்மாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜை நடந்தது. கார்த்திகை தீபத் திருவிழா, எட்டாம் நாள் விழாவில் குதிரை வாகனத்தில், உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தீபத் திருவிழா பத்தாம் நாளில் 2,668 அடி உயரம் அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1,150 மீட்டர் தீபத்திரி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.