உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளிர்காலம் துவக்கம்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம்

குளிர்காலம் துவக்கம்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றும் வைபவம் நடந்தது.

இதனை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு வடபத்திரசயனர் சன்னதி கோபால விலாசத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், வடபத்ரசாயி, ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆழ்வார்கள் எழுந்தருளினர். அங்கு குளிர்காலம் துவங்குவதை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளை கோயில் பட்டர்கள் செய்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் முடிவடைந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் பட்டர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !