திருப்பதியில் பிரதமர் மோடி; 140 கோடி பாரத மக்களின் நலனுக்காக பிரார்த்தனை
ADDED :759 days ago
திருப்பதி: ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையானை பிரதமர் மோடி தரிசனம் செய்தார். பிரதமருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி, திருப்பதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதி கோயிலில் வழிபாடு செய்த புகைப்படங்களை பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு, செழிப்புக்காக திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பிரார்த்தனை செய்தேன் என தெரிவித்துள்ளார்.