தங்கவயல் திருவேங்கடமுடையான் கோவிலில் சத்ய நாராயணா பூஜை
தங்கவயல்: கார்த்திகை மாத பவுர்ணமியை ஒட்டி திருவேங்கடமுடையான் கோவிலில், நேற்று லட்சுமி நாராயணா பூஜை, சத்ய நாராயணா பூஜைகள் நடந்தன. தங்கவயலின் கோர
மண்டல் டாங்க் பிளாக், டிரைவர்ஸ் லைன் பகுதியில் 130 ஆண்டுகள் பழமையான திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி பூஜை, சுவாதி நட்சத்திர பூஜை நடத்தப்படுகிறது. கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி, நேற்று காலையில் திவ்விய பிரபந்த சேவா காலம், விஸ்வக்சேனா ஆராதனை, லட்சுமி நாராயணா ஹோமம், சத்ய நாராயணா பூஜை ஆகியவை நடந்தன. ‘கோவிந்தா’ கோஷங்கள் முழங்க, மஹா தீபாரா தனை நடந்தது. பழமை வாய்ந்த அரச மரத்தின் அருகில் பெண்கள் விளக்கேற்றி வழிபட் டனர். சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ, தாலிக் கயிறு, சட்டை துண்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. பூஜை ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் மகேந்திரன் செய்திருந்தார்.