அக்.24ல் ஷீரடி சாய்பாபா 94வது மகாசமாதி தினம்!
ADDED :4745 days ago
மதுரை: மதுரை ஆண்டாள்புரம் ஷீரடி சாய்பாபா கோயிலில் அக்.24ல் பாபாவின் 94வது மகாசமாதி தினபூஜை நடக்கிறது. ஷீரடி சாய்பாபா விஜயதசமியன்று மகாசமாதி அடைந்தார், இதையொட்டி அக்.24 காலை 6க்கு காலை ஆரத்தி, 7க்கு 108 கலசபூஜை, 8க்கு கணபதி,சுதர்சன, சாய்பாபா காயத்ரி அஷ்டோத்ர ஹோமங்கள், 9.30க்கு அபிஷேகம், 9.30 சாய் சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 11க்கு துனிபூஜை, 11.30க்கு மராத்தியில் பகல் ஆரத்தி, மதியம் 12க்கு அன்னதானம், மாலை5க்கு சாய்பஜன், 6.30க்கு மாலை ஆரத்தி, இரவு8க்கு இரவு ஆரத்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நவராத்திரியை முன்னிட்டு, அக்.23வரை தினமும் மாலை 5க்கு சாய் சகஸ்ரநாம பாராயணம் நடக்கும். அக்.18ல் மட்டும் மாலை 4க்கு நடத்தப்படும்.