உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில் ருத்ர பாராயண சிறப்பு யாகம்

யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில் ருத்ர பாராயண சிறப்பு யாகம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில் 105வது ஜெயந்தி நிறைவு விழாவில் நடந்த ருத்ர பாராயண சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை- செங்கம் சாலை, அக்ரஹாரக்கொல்லையிலுள்ள  யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் 105-வது ஆண்டு  ஜெயந்தி விழா நடந்தது. விழாவில் இன்று, 1ம் தேதி மஹா அபிஷேகம், நாம சங்கீர்த்தனத்துடன் பஜனை மற்றும் ருத்ர பாராயண சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, சென்னை ‘சத்யசாய் நிருத்ய வாஹினி’ மற்றும் ‘அஸ்வின் சித்தார்த் குழு’வினரின் யோகி ராமா என்ற பக்தி நாடகம், இரவு, 7:45 மணிக்கு பல்லக்கில் பகவான் உற்சவர் யோகி ராம்சுரத்குமார் வலம் வரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலர்கள் மாதேவகி, விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, மருத்துவர்  ராமநாதன், சுவாமிநாதன், குமரன் மற்றும் தன்னார்வலர்கள், ஆஸ்ரம ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !