ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம்
ADDED :1042 days ago
கோவை; ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு 108 சங்கு தீர்த்தங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.