பயணத்தை இனிதாக்கும் தர்மசாஸ்தா
ADDED :642 days ago
தேனி ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனுாரில் தர்மசாஸ்தா கோயில் கொண்டுள்ளார்.முன்பு வண்டி சாஸ்தா என அழைக்கப்பட்டவர் தற்போது தர்மசாஸ்தா என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். வேட்டை நாய் முன்னே செல்ல குதிரையில் சாட்டையை சுழற்றிய நிலையில் காவல் தெய்வமாக இருக்கிறார். இங்கு எறிகாசு காணிக்கை என்னும் பெயரில் பயணம் பாதுகாப்பாக அமைய காசுகளை வீசுகின்றனர். இதனால் வாகனங்கள் கடக்கும் போது காசுகள் தரையில் விழும் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும். ஆடி18 அன்று நடக்கும் திருவிழாவில் கிடா, சேவல் வெட்டி அன்னதானம் வழங்குவர்.ஆண்டிபட்டியில் இருந்து 5 கி.மீ.,நேரம்: காலை 6:00 - இரவு 7:00 மணிதொடர்புக்கு: 96594 87101