சபரிமலைக்கு இருமுடி கட்டி மலை பாதையில் நடந்து வந்த 100 வயது பாட்டி
ADDED :774 days ago
சபரிமலை, கேரள மாநிலம் வயநாடு மூணான குழியைச் சேர்ந்த 100 வயது பாட்டி பாருக்குட்டி அம்மா பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மலை பாதையில் நடந்து வந்து ஐயப்ப தரிசனம் நடத்தினார். அவருடன் பாட்டியின் பேரன்களின் பேரன் பேத்திகள் உடன் வந்தனர். நூறு வயதில் சபரிமலை வந்த பாருகுட்டி அம்மாவுக்கு சபரிமலை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் சால்வை அணிவித்து வரவேற்றார்.