உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ஸ்ரீதம் மடம் சார்பில் ராமேஸ்வரம் பக்தர்களுக்கு ரூ.39 லட்சத்தில் நிழற்குடை

அயோத்தி ஸ்ரீதம் மடம் சார்பில் ராமேஸ்வரம் பக்தர்களுக்கு ரூ.39 லட்சத்தில் நிழற்குடை

ராமேஸ்வரம்; அயோத்தி ஸ்ரீராம் மடம் சார்பில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ரூ. 39 லட்சம் செலவில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராட பக்தர்கள் வடக்கு ரதவீதியில் பாதுகாப்பு இன்றி திறந்த வெளியில் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள். இதனால் வெயில், மழையில் பக்தர்கள் பெரிதும் பாதித்தனர். இங்கு நிழல் பந்தல் அமைக்க கோரி கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் பலதடவை முறையிட்டும் ஹிந்து அறநிலையதுறை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முயற்சியில் அயோத்தி ஸ்ரீதம் மடம் சார்பில் ரூ.39 லட்சத்தில் கோயில் வடக்கு ரதவீதியில் 400 மீ.,ல் இரும்பு சீட்டில் நிழல் பந்தல் அமைத்தனர். இதனை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் அனுமதியின்படி நேற்று ஸ்ரீதம் மடம் நிர்வாகி சுவாமி ராகவாச்சாரியார் மகராஜ் திறந்து வைத்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். விழாவில் பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளிதரன், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், கோயில் ஆய்வாளர் பிரபாகரன், ராமேஸ்வரம் ரோட்டரி சங்கம் முன்னாள் தலைவர் முருகன் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !