உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குச்சனூர் சனீஸ்வரன் கோயில் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்க அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

குச்சனூர் சனீஸ்வரன் கோயில் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்க அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் நிர்வாகத்தை மீண்டும் பரம்பரை டிரஸ்டிகளிடம் வழங்க ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. சுயம்புவாக தோன்றியதும், சனீஸ்வர பகவானுக்கென தனி கோயிலாகவும் இங்கு மட்டுமே உள்ளது. ஆண்டுதோறும் ஆடிமாதம் பெருந்திருவிழா நடைபெறும். தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த கோயில் இங்குள்ள பரம்பரை டிரஸ்டிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. சில குற்றச்சாட்டுக்களை கூறி 2003 மார்ச் 25 ல் ஹிந்து சமய அறநிலைய துறை கோயிலை எடுத்துக் கொண்டது. நிர்வாகம் செய்ய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். ஹிந்து சமய அறநிலையத்துறையின் உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் பரம்பரை டிரஸ்டி திருமலைமுத்து மற்றும் தீபன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். நீண்ட காலமாக டிரஸ்டிகளுக்கும், ஹிந்து சமய அறநிலைய துறைக்கும் கோயிலை நிர்வகிக்கும் உரிமை குறித்து வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு வெளியான 4 வாரங்களுக்குள், கோயில் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவர் மட்டுமே வழக்கு தொடர்ந்திருந்தாலும், நிர்வாகத்தை 7 டிரஸ்டிகளிடமும் ஒப்படைக்க உத்தரவிடப்படுகிறது" என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத் துறையினரிடம் கேட்டதற்கு, " தீர்ப்பை எதிர்த்து ஹிந்து சமய அறநிலைய துறை சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !