உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்ஷிணகாசி காலபைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா; பக்தர்கள் பரவசம்

தட்ஷிணகாசி காலபைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா; பக்தர்கள் பரவசம்

அதியமான்கோட்டை; அதியமான்கோட்டை தட்ஷிணகாசி காலபைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையிலுள்ள தட்ஷிணகாசி காலபைரவர் கோவிலில் காலாஷ்டமியை (காலபைரவர் ஜெயந்தி) முன்னிட்டு நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு  விஸ்வரூப தரிசனம், மஹாகணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், ஏகாந்த ருத்ர ஹோமம், கோ பூஜை பெற்றது. பைரவர் பிரகார வலமும், காலை, 9:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம், ராஜ அலங்காரத்தில்  பைரவர் சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு  சத்ருசம்ஹார யாகம், 1,008 கிலோ மிளகாய் யாகம், இரவு, 2:00 மணிக்கு பைரவர் பல்லக்கில் கோவிலை வலம் வருதல்,  சுவாமிக்கு கலசாபிஷேகம், 1,008 லிட்டர் பால், 1,008 கிலோ பழம் அபிஷேகம்  நடக்கிறது. தொடர்ந்து பைரவர் சத்ரு சம்ஹார அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். நாளை  புதன்கிழமை காலை, கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலாஷ்டமி விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில், செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் குருக்கள் கிருபாகரன் ஆகியோர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !