காட்டுமன்னார்கோவில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை
ADDED :637 days ago
காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் பெரியகுளம் மேல்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.காட்டுமன்னார்கோயில் பெரியகுளம் மேல் கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஐயப்ப சுவாமிக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது .காலை அருள்மிகு ஐயப்ப சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தண்ணீர், விபூதி, சந்தனம், நெய் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா பூஜை நடத்தப்பட்டு, படி பூஜையும், மகா தீபாரதனை நடந்தது. மாலை, பெண்கள் திருவிளக்குடன் பங்கேற்கும், பம்பா விளக்கு நிகழ்வும். அதனை தொடர்ந்து, சுவாமி வீதி உலா காட்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டை ஞான சக்தி சிவாச்சாரியார், ரவிசங்கர் சிவாச்சாரியார். ஐயப்பா சேவ சங்க ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.