ரஜினி பிறந்த நாள்; பத்ரகாளியம்மன் கோயிலில் தங்க தேர் இழுத்த ரசிகர்கள்
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தங்கத்தேர் இழுத்தனர். நடிகர் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிர்கள் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது.இங்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அவரது ரசிகர்கள் சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். பின் மாவட்ட செயலாளர் ராமேஷ்வரன் தலைமையில் தங்கதேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பாசியாபுரம் கண்ணன், அகரம் முருகன், மணலூர் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.