முத்தங்கி சேவையில் வீரராகவ பெருமாள்!
ADDED :4747 days ago
திருவள்ளூர்: நவராத்திரி விழாவில் ஐந்தாம் நாளான நேற்று, முத்தங்கி சேவையில், வீரராகவ பெருமாள் அருள்பாலித்தார்.திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், நவராத்திரி விழா, கடந்த 15ம் தேதி முதல் நடக்கிறது. தினசரி, பெருமாள், தாயாருக்கு பிற்பகல், 2:00 மணியளவில் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, தேசிகன் சன்னிதி எதிரில் உள்ள கொலு மண்டபத்தில் பக்தி உலாவும், பின், ஒவ்வொரு அலங்காரத்திலும், உற்சவர் காட்சி அளிக்கிறார்.நவராத்திரி விழாவின், ஐந்தாவது நாளான நேற்று, கனகவல்லி தாயாருடன், வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன், முத்தங்கி சேவையில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.