உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்; கால் வைக்க இடம் இல்லை..!

சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்; கால் வைக்க இடம் இல்லை..!

சபரிமலை ; சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதுகிறது; பம்பையில் கால் வைக்கும் இடம் எல்லாம் மனித தலைகளாக காட்சி அளிக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டதிலிருந்து, பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது வரலாறு காணாத கூட்டத்தால் தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பம்பையில் இருந்து சன்னிதானம் சென்றடைவதற்கு 20 மணி நேரம் ஆகிறது. சபரி பீடத்தில் இருந்து பதினெட்டாம் படி வரையிலான பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக  18 படியேறி ஐயப்பனை தரிசிக்க முடியாமல் வேறு இடங்களில் தங்கள் வழிபாடுகளை முடித்துக் கொண்டு மலையிறங்கி  செல்லும் நிலை உள்ளது.  அடுத்து வரும் நாட்களில் கூட்டம் இன்னும் அதிகம் அதிகரிக்கும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !