இன்று சதுர்த்தி, திருவோண விரதம்; விநாயகர், பெருமாளை வழிபட நல்லதே நடக்கும்
ADDED :1017 days ago
விநாயகனை வழிபட சிறந்த நாள் சதுர்த்தி. விநாயகப் பெருமானை இந்து சமயத்தின் முழு முதற் கடவுள். தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை எழுதியவர். முழு முதற்கடவுளாகிய விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய முக்கியமான விரதம் இந்த சதுர்த்தி விரதம். சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் சகல விதமான துன்பங்கள், தோஷங்கள் விலகி வளமான வாழ்வு அமையும். முதலில் தன் தாய் பார்வதிக்கு கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது எல்லாம் இவ்விரதம் இருந்து தான். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளை வழிபட சந்திர தோஷம் நீங்கும். இன்று விநாயகர், பெருமாளை வழிபட நிம்மதியும் நிறைவுமாக வாழலாம்!