/
கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள் உற்சவம்; சாய் கிரீடம், அட்டிகை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து நம்பெருமாள் காட்சி
ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள் உற்சவம்; சாய் கிரீடம், அட்டிகை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து நம்பெருமாள் காட்சி
ADDED :1018 days ago
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதேசி பகல் பத்து உற்சவத்தில் நான்காம் நாளான இன்று நம் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து, கண்ணனெனும் கருந் தெய்வம் பாசுரத்திற்கு ஏற்ப முத்து சாய் கிரீடம், ரத்தின காதுகாப்பு, ரத்தின அபய ஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், சந்திரகலா, பருத்திப்பூ பதக்கம், நகரி, ஆறு வட முத்துமாலை, காசு மாலை, அடுத்து வைட நகர மகர கண்டிகை ஹாரங்கள், வைர ரங்கூன் அட்டிகை உள்ளிட்ட ஆபரணங்கள் தரித்து அர்ஜூன மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.