திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ. 43 லட்சம் உண்டியல் வருமானம்
ADDED :179 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள், உப கோயில்கள் உண்டியல்கள் இன்று கோயில் துணை கமிஷனர் ஞானசேகரன், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி கமிஷனர் இளங்கோ, மதுரை ஆய்வாளர் கர்ணன், கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சுமதி, சத்தியசீலன் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. அதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ. 43 லட்சத்து 3 ஆயிரத்து 699ம், தங்கம் 80 கிராம், வெள்ளி 2 கிலோ 750 கிராம் கோயிலுக்கு வருமானமாக கிடைத்தது. பாடசாலை மாணவர்கள், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவியர், ஐயப்ப சேவா சங்கத்தினர் கோயில் பணியாளர்கள் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.