நேபாளம் காத்மாண்டுவில் சிந்தூர் ஜாத்ரா: கோலகலமாக நடைபெற்ற குங்குமத் திருவிழா
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் நேபாளப் புத்தாண்டான 2083-ஐ வரவேற்கும் விதமாக நேற்று வண்ணமயமான சிந்தூர் ஜாத்ரா (குங்குமத் திருவிழா) வெகு சிறப்பாக நடைபெற்றது.
சந்திர நாட்காட்டியின்படி நேபாளப் புத்தாண்டுஐ வரவேற்கும் விதமாக, நேவா நகரமான திமியில் உள்ள பால்குமாரி கோயிலை, பாரம்பரிய திமே (முரசு) முழக்கத்துடன் சடங்குப் பல்லக்குகள் வலம் வர, அந்நகரம் குங்குமப் பொடியின் மணம் முழுவதும் நிறைந்திருந்தது. சிந்தூர் ஜாத்ரா என்பது நேபாளத்தின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ள மத்தியபூர் திமியில், பைசாக் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் (நேபாள புத்தாண்டு) ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஒரு துடிப்பான, வண்ணமயமான திருவிழாவாகும். சிந்துர் ஜாத்ராவின் போது, மக்கள் பாரம்பரிய இசை அதிர்வுகளுடன், நடனமாடி, வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு, ஒருவருக்கொருவர் சிந்துர் (குங்குமம்) பூசிக் கொள்கிறார்கள். மத்யாபூர் திமி பகுதி முழுவதும் குங்குமத்தால் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கும். அதன்படி நேற்று நடைபெற்ற விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இது வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கிறது.