உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்களகிரி வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் வீதியுலா

மங்களகிரி வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் வீதியுலா

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா விழாவில் மங்களகிரி வாகனத்தில் ராமானுஜர் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.


ராமானுஜர் அவதார தலமான ஸ்ரீபெரும்புதுாரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ராமானுஜர் அவதார உத்சவம் மற்றும் பிரம்மோத்சவ திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்தாண்டு விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. விழாவில் மங்களகிரி வாகன புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ராமானுஜர் மங்களகிரி வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஏப்., 21ம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல, அதிகேசவப் பெருமாள் உத்சவம் மே 1ல் துவங்கி, மே 10ம் தேதி வரை நடைபெறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !