உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவலம் வந்தநல்லூர் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்

கரிவலம் வந்தநல்லூர் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்

திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் புதுமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா துவங்கியது. கரிவலம்வந்தநல்லூர் புதுமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா மற்றும் திருவிளக்கு பூஜை கடந்த 15ம் தேதி துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் நடத்தப்பட்டு ஒவ்வொரு நாளும் அலங்கார, அவதார காட்சியுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. வரும் 23ம் தேதி சரஸ்வதி பூஜை அன்று மாலை 6.30 மணிக்கு காந்திமதியம்மாள் தலைமையில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. 24ம் தேதி விஜயதசமி பூஜை நடக்கிறது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் பூசாரி சஞ்சீவியாபிள்ளை அன் சன், விழாக் கமிட்டியார் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !