உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

பொன் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

கொட்டாம்பட்டி; அலங்கம்பட்டி பொன் அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் டிச. 1 முதல் விரதமிருந்தனர். நேற்று மாலை நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்றவர்கள் குதிரை பொட்டலில் இருந்த புரவிகள் மற்றும் நேர்த்திக்கடன் சிலைகளை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு அய்யனாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அர்ச்சனை நடைபெற்றது. இவ் விழாவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !