உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் முதல்முறையாக பிரம்மாண்ட மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

சென்னையில் முதல்முறையாக பிரம்மாண்ட மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

சென்னை: சென்னையில் திருமுறை திருவிழா 108 ஓதுவாமூர்த்திகள் திருமந்திரம் முழங்க, நடராஜர் திருச்சபையில் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

12 திருமுறைகளை போற்றிடும் வகையில் ‘திருமுறை திருவிழா’ இன்று டிச.16ம்தேதி சென்னை நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. முதல்முறையாக மதுரைக்கு வெளியே சென்னையில் மிக பிரம்மாண்டமாக திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திருவாடுதுறை, தருமபுரம், மதுரை மற்றும் 10 சைவஆதீனங்கள் ஆசிவழங்கினர். சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !