உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் கடும் கூட்டம்: கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம்!

சபரிமலையில் கடும் கூட்டம்: கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம்!

சபரிமலை ; கடந்த ஒரு வாராமாக சபரிமலையில் பக்தர்கள் மிக மோசமான சிரமங்களை சந்தித்து வருகின்றனர். காடுகளிலும், செட்டுகளிலும் 12 முதல் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் நடத்தினர். பக்தர்கள் கூட்டம் காரணமாக சபரிமலை ரோடுகள் ஸ்தம்பித்ததால் கேரள அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் சர்வீஸ் முடங்கியது. இதனால் நிலக்கல்– பம்பை இடையே சென்று வருவதில் பக்தர்கள் பெரும் கஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில் சபரிமலையில் அதிகரித்துள்ள பக்தர்கள் நெரிசலை சமாளித்து, விரைவில் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, கூடுதல் பணியாளர்களை நியமிக்க, கேரள அரசுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !