உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா; வெளிநாட்டு மலர்களால் அலங்காரம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா; வெளிநாட்டு மலர்களால் அலங்காரம்

காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சி முன்னிட்டு பகவான் சன்னதி சுற்றி சுமார் ஆறு டன் பூ, காய்கறிகளால் அலங்காரம் சிறப்பாக செய்யப்பட்டது.

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, சனிபகவான் சன்னதி, சிவன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல்வேறு வகையான மலர்கள், பூ வகைகள். காய்கறிகள் கொண்ட பிரமாண்ட அலங்காரம் செய்யப்பட்டது.

இது குறித்து ஓசூர் பூ அலங்கார் ரமேஷ் கூறுகையில்; திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனி பெயர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக கோவிலில் பூ அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. பகவனுக்காக பிரத்தியோகமாக ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் இருந்து ஆர்கேட்., கார்வின்ஸ், ஆன்திரிக்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு மலர்கள்பல வகைகள், பெங்களூரில் இருந்து 50க்கும் மேற்பட்ட ரோஸ் வகைகள் கொண்ட சுமார் 6 டன் பூ வகைகள் கொண்டுவரப்பட்டு சுமார் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூலம் ஆலயத்தை சுற்றி அலங்கரிக்கப்பட்டது. மேலும் ஒரு டன் காய்கறி. இளநீர், தேங்காய், சோளம் உள்ளிட்ட சிறு தானியங்களை கொண்டு இறைவடியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்காரப் பணியில் ஊழியர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். சனி பகவான் கோவிலில் பலவகையான மலர்கள் கொண்ட அலங்கரிக்கப்பட்ட அலங்காரத்தை பக்தர்கள் கண்டு களித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !